தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் 11 வது (VP11) திரைப்படமான இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் நாக சைதன்யாவிற்கு இது 22 ஆவது(NC22) திரைப்படமாகும்.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் NC22 திரைப்படத்தில், நாக சைதன்யாவுடன் இணைந்து பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் என ஒரு நடிகர்கள் பட்டாளமே முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் SR.கதிர் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். NC22 படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூஜைகளுடன் தொடங்கிய NC22 திரைப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் NC22 திரைப்படத்தின் டைட்டில் தற்போது வெளியானது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்திருக்கும் NC22 திரைப்படத்திற்கு கஸ்டடி என பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கஸ்டடி படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இதோ…