தனக்கென தனி பாணியில் தொடர்ச்சியாக பக்கா ஆக்சன் என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக தெலுங்கு திரை உலகில் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் கஸ்டடி. தனது திரைப்பயணத்தில் 11வது திரைப்படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறை தெலுங்கு - தமிழ் என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் கஸ்டடி திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் நாக சைதன்யா தனது திரைப்பயணத்தில் 22 ஆவது திரைப்படமாக கஸ்டடி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ள கஸ்டடி திரைப்படத்தில் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ள கஸ்டடி திரைப்படத்திற்கு, SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டன் சிவா மற்றும் மகேஷ் மேத்யூ கஸ்டடி படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். வித்தியாசமான போலீஸ் திரைப்படமாக தயாராகி இருக்கும் கஸ்டடி திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்லவரவேற்ப்பை பெற்று பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக போலீஸ் திரைப்படங்களில் வில்லன்களை ஹீரோக்கள் அழிப்பது தான் முக்கிய கதையாக இருக்கும், ஆனால் இந்த கஸ்டடி திரைப்படத்தில் கடைசிவரை வில்லன் சாகாமல் பார்த்துக் கொள்வதே ஹீரோவின் முக்கிய பணி என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த கோடை விடுமுறையை மக்கள் கொண்டாடும் வகையில் வருகிற மே 12-ம் தேதி முதல் கஸ்டடி திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில் கஸ்டடி திரைப்படத்தின் பிரம்மாண்டமான PRE RELEASE விழா நேற்று (மே 7) நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது போலவே பேசினார். முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, “டான்ஸ் வேணுமா டேன்ஸ் இருக்கு.. ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு..” என தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது போலவே, கஸ்டடி பட விழாவில், இந்த படத்தில், “ஸ்டைல் வேணுமா? ஸ்டைல் இருக்கு… ஆக்சன் வேணுமா? ஆக்சன் இருக்கு… பர்ஃபார்மன்ஸ் வேணுமா பர்பார்மன்ஸ் இருக்கு… ஃபேமிலி சென்டிமென்ட் வேணுமா? ஃபேமிலி சென்டிமென்ட் இருக்கு… மாஸ் வேணுமா? மாஸ் இருக்கு..!” என பேசியதும் ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது. சமூக வலைதளங்களில் வைரலாகும் கஸ்டடி பட விழாவில் வெங்கட் பிரபு பேசிய அந்த கலக்கல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.