சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.
தற்போது தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை Mohan Krishna Indraganti இயக்குகிறார்.இந்த படத்திற்கு வித்தியாசமாக V என்ற ஒற்றை எழுத்தில் படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்



இந்த படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.அமித் திரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கிப்பட்டுள்ளது.



இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.விறுவிறுப்பான இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்