தமிழகத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி மருத்துவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவுமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உதவி செய்து வருவதை நாம் தினசரி பார்த்து வருகிறோம். பல சினிமா பிரபலங்கள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவி வருகின்றனர். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சூர்யா கார்த்தி குடும்பம், நடிகர் அஜித்குமார் ,நடிகர் விக்ரம், இயக்குநர் ஏஆர்.முருகதாஸ் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து என பலரும் நிதி உதவி அளித்தனர்.

இந்நிலையில் நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.விஜய் வசந்த் அவர்கள் 25 லட்ச ரூபாய் நிதி உதவியாக வழங்கியுள்ளார். தமிழகத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வசந்த்&கோ திரு.வசந்த் குமார் அவர்களின் மகனான திரு.விஜய் வசந்த் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நாடோடிகள்,தோழா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து தங்கள் நிறுவனமான வசந்த்&கோ நிறுவனத்தையும் வசந்த் டிவி சேனலையும் நிர்வாகித்து வந்தார்.

கடந்த வருடம் வசந்த்&கோ நிறுவனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.வசந்த் குமார் அவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் திரு.வசந்த குமார் அவர்களின் மகனான திரு.விஜய் வசந்த் அவர்கள் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோசமான காலகட்டத்தில் ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து 25 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். திரு.விஜய் வசந்த் அவர்கள் வழங்கிய நிதி உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

A post shared by Vijay Vasanth (@iamvijayvasanth)