பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் நேற்று பொங்கலையொட்டி வெளியான படம் ‘வாரிசு’. ரசிகர்களின் பேராதரவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில் படத்தில் விஜயுடன் பணியாற்றியது குறித்தும் வாரிசு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் குறித்தும் வாரிசு பட நடிகை சம்யுக்தா கலாட்டா மீடியா பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டார். இதில் விஜயுடன் இணைந்து காட்சியில் நடித்தீர்களா? அந்த அனுபவம் குறித்த கேள்விக்கு,
“விஜய் சாருடன் இணைந்து பேசுமளவு காட்சிகள் எதும் பெரிதாக இல்லை, படத்தில் ஒரு காட்சியில் வீட்டை விட்டு ஷ்யாமும் நானும் கிளம்ப வேண்டும். அதுதான் காட்சி. ஆனால் ஷ்யாம் கிளம்பியதற்கு பின்பு நான் அங்கே நின்று விஜய் சாரை பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது ஷ்யாம் 'நீங்கள் என்னோட வெளிய வரனும் நீங்க என்ன விஜய் சார் ரை இன்னும் பார்த்துட்டு இருக்கீங்க' என்று கேட்டார். அந்த காட்சி ரொம்பவும் சீரியஸான காட்சி. அங்கு அப்படி செய்ததை வைத்து என்னை கிண்டலடித்து கொண்டிருந்தனர் . விஜய் சார் அவ்ளோ க்யூட்டா இருந்தா நான் என்ன பன்றது!" என்று நடிகை சம்யுக்தா கூறினார்.
மேலும் அதனை தொடர்ந்து “விஜய் சார் நடிக்கும் போது நாங்கள் எல்லோரும் அவரை தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் அவரிடம் ஏதோ காந்த சக்தி இருக்கும் போல, அவர் நடிக்கும் போது செட்டில் இருந்த எல்லோரும் அங்கு தான் இருப்பார்கள். குறிப்பா ஒரு celebration பாடலுக்கு அவருடைய நடனம் பயங்கரமா இருந்தது. அவ்ளோ energy அவருக்கு .. அவர் ஆடி முடித்ததும் எல்லோரும் உடனே கைத்தட்ட ஆரம்பித்தனர். விஜய் சார் காலையில் 7 மணிக்கு வந்தார் என்றால் அன்றைய படப்பிடிப்பு முடியும் வரை அவரது செல்போனை எடுத்ததில்லை. அது எப்படினே தெரியவில்லை. அவ்ளோ ஈடுபாடு கொண்டவர் அவர் வேலையில்..” என்று படபிடிப்பு தளம் குறித்த தகவலையும் பகிர்ந்தார்.
பிக்பாஸ் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சம்யுக்தா தொடர்ந்து படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். அதன் பின் தளபதி விஜய் படமான் வாரிசு படத்தில் நடிகர் ஷ்யாம் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு படத்தின் அனுபவம் குறித்தும் படபிடிப்பு தளத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் குறித்தும் வாரிசு நடிகை சம்யுக்தாவின் பேட்டி முழு வீடியோ இதோ..