நடிகை வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் 27-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி வீட்டிலேயே திருமணம் நடந்தது. திருமணம் நடந்த முடிந்த அதே நாளில் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வட பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முறையாக விவாகரத்து பெறாமல் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ள எலிசபெத் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து நடிகையும், இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவரது ட்விட்டர் பதிவில்,
தற்போது தான் செய்தியை பார்த்தேன். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கிறது, இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படித்த ஒருவர் எப்படி இப்படி ஒரு தவறை செய்ய முடியும்?அதிர்ச்சியாக இருக்கிறது. வனிதா, பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி காத்திருந்தார். அவர் ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை.
வனிதா நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டார். அது குறித்து அவரே தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த திருமணம் மூலம் அவர் செட்டில் ஆவார் என்று நாம் நம்பியிருந்தேன். அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்பினார்கள் என்றார்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் பதிவுகளுக்கு பதிலளித்த வனிதா, உங்களின் அக்கறைக்கு நன்றி. நான் நன்றாக படித்தவள், சட்டம் பற்றிய அறிவும் உண்டும். என் வாழ்க்கையை என்னால் பார்த்துக் கொள்ள முடியும். யாருடைய ஆதரவும் இன்றி...என் முடிவுகளை நீங்கள் அங்கீகரிக்கவோ, ஆதரிக்கவோ தேவையில்லை. இது பொது பிரச்சனை இல்லை என்பதால் தள்ளி இருக்கவும். இது உங்களின் ஷோ இல்லை என்று பதில் அளித்தார்.
வனிதாவிற்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அளித்த பதிலில், கண்டிப்பாக. என் அக்கறை உங்களை பற்றி அல்ல அவரின் முதல் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி தான். நீங்கள் தைரியமானவர். இதை கையாள்வீர்கள், ஆனால் அந்த பெண்? அவர் பொதுமக்களிடம் ஆதரவு கேட்கிறார். சட்டப்படி விவாகரத்து பெறாமல் மறுமணம் செய்ததை பற்றி தான் நான் பேசினேன் என்று குறிப்பிட்டார்.
அதன் பின் வனிதா அவரது பதிவில், இரண்டு பேர் ஏன் பிரிகிறார்கள் அல்லது விவாகரத்து பெறுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?. இதற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை. அவர்களின் பர்சனல் விஷயத்தில் நானே தலையிடவில்லை. அதனால் உங்கள் வேலையை மட்டும் பார்க்கவும். மேலும் உங்களுக்கு சரியாகக் கூட தெரியாத நபர் மீதான அக்கறையை உங்களுடன் வைத்துக் கொள்ளவும். வெளிப்படையாக பேசினால் அவர்கள் தவறானவர்கள் அல்ல என்று அர்த்தம் இல்லை. சட்டம் பார்த்துக் கொள்ளட்டும். நீங்களும், நானும் வெறும் பார்வையாளர்களே. கமெண்ட் செய்ய எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Its a small world @LakshmyRamki please #mindyourbusiness https://t.co/Bx75KLk1Uk
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 29, 2020
You keep doing ur original duty of talking about rape abuse and suicide.stop discussing family issues without their consent
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 29, 2020
Do u know why 2 people get separated or divorced.
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 29, 2020
It is not your business to be concerned in any way as your not involved in this are all.I myself am not interfering in their personal.kindly mind your own business and keep your concerns regarding someone you hardly know to urself