சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியாக திகழும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதனை அடுத்து பிக்பாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது.
24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸில் 5 சீசன்களை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக தற்காலிகமாக பிக்பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்த கமல்ஹாசன் மீண்டும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் சந்திப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் TR தொகுத்து வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த ஸ்டைலான ப்ரோமோ வீடியோவும் இன்று (பிப்ரவரி 24ஆம் தேதி) வெளியானது.
இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ்-ன் 5 சீசன்களில் இருந்து 14 போட்டியாளர்கள் களமிறங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், நேற்று (பிப்ரவரி 23ஆம் தேதி) வனிதா விஜயகுமார் அனைத்து போட்டியாளர்களும் தனக்கு எதிராக நிற்பதாகவும் மிகுந்த மன உளைச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிக்பாஸ் இடம் தெரிவித்துவிட்டு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறினார்.
இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததற்கு பிறகு வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவாக தனது புகைப்படத்தோடு, “நல்ல மனோ ஆரோக்கியத்திற்கு திரும்பிவிட்டேன்.. வாழ்க்கை ஒரே இடத்தில் நிற்பதற்கு அல்ல தொடர்ந்து செல்ல வேண்டும்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். வனிதா விஜயகுமாரின் அந்த பதிவு இதோ…