ட்விட்டர் இந்தியாவில் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலர் பயன்படுத்தும் முக்க்கிய சமூகவலைத்தளங்களில் ஒன்று.ட்விட்டரில் நம்பத்தக்க செய்திகள் விரைவில் கிடைப்பதால் பலரும் ட்விட்டர் பயன்படுத்துவதை விரும்புவார்கள்,அதோடு பிரபலங்களுடனும் பேசும் வாய்ப்புகள் சிலநேரம் கிடைக்கும்.
ட்விட்டர் கடந்த சில வருடங்களாக அதிகம் ட்வீட் விஷயங்களை ட்ராக் செய்து ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தனர்.கடந்த சில வருடங்களாக தென்னிந்திய படங்கள் இந்த லிஸ்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.ட்விட்டரில் அவ்வப்போது சில ஹாஸ்டேக்கள் ட்ரெண்ட் அடிக்கும்.
இன்று ஹாஸ்டேக் தினத்தை முன்னிட்டு 2021 தொடக்கத்தில் இருந்து ஜூன் 30 வரை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ஹாஸ்டேக்களை ட்விட்டர் வெளியிட்டுள்ளனர்.இந்த ஆறு மாதத்தில் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹாஸ்டேக்கள் அதிகம் தென்னிந்தியாவை சேர்ந்ததாகவே இருந்தது.
இதில் முதல் இடத்தை தல அஜித்தின் வலிமை , இரண்டாவது இடத்தை தளபதி விஜயின் மாஸ்டர் படங்கள் பெற்றன.மூன்றாவது இடத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் Sarkaru Vaari Paata பிடித்தது.அடுத்த 7 இடங்களில் அஜித்குமார்,தளபதி 65,வக்கீல் சாப் உள்ளிட்ட ஹாஸ்டேக்கள் இடம்பெற்றிருந்தன.
It's #HashtagDay so you know what that means! Here's the list of the most Tweeted hashtags in India in the first half of 2021 👀 pic.twitter.com/xuKApkk5cy
— Twitter India (@TwitterIndia) August 23, 2021