இயக்குனர் மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தை தனா இயக்கியிருந்தார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

.

சித் ஸ்ரீராம் இந்த படத்திற்கு இசையமைத்தார். ப்ரீதா ஜெயராமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கச்சிதமாக அமைந்திருந்தது. மணிரத்னம் இயக்கியது போலவே உள்ளது என படம் பார்த்த திரை விரும்பிகள் புகழாரம் சூட்டினர். பழிவாங்குதல் மட்டுமே தீர்வாகது எனும் ஆழமான கதைக்கருவை கொண்டது இப்படம். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது.

.

தற்போது படத்திலிருந்து மன்னவா பாடல் வீடியோ வெளியானது. சக்திஸ்ரீ கோபாலன் பாடிய இந்த பாடல் வரிகளை சிவா ஆனந்த் எழுதியுள்ளார்.

.