தமிழ் சினிமாவின் நட்சத்திர தயாரிப்பாளராக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அடுத்து தயாரிக்கும் புதிய படமாக கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் உடன் கைகோர்த்துள்ள கிச்சா 46 திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. முன்னதாக ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல் முறையாக சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் வாடிவாசல் திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கிறார். வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக நுணுக்கமான பிரம்மிக்க வைக்கும் VFX காட்சிகள் வாடிவாசல் திரைப்படத்திற்கு தேவைப்படுவதால் அதற்காக ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய முன்னணி நிறுவனத்தோடு இணைந்து லண்டனில் தங்கி இருந்து அந்த CG பணிகளை இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் கண்காணித்து வந்தார். மேலும் வாடிவாசல் திரைப்படத்திற்காக பிரத்யேகமாக அனிமேட்ரானிக்ஸ் முறையில் காளை ஒன்று ரோபோவாக தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தனது தயாரிப்பில் அடுத்த முக்கிய திரைப்படமாக கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிலான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த கிச்சா சுதீப் தொடர்ந்து SS.ராஜமௌலியின் பாகுபலி, மற்றும் சல்மான் கானின் தபாங் 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு கிச்சா சுதீப் நடிப்பில் வெளிவந்த விக்ராந்த் ரோனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த வரிசையில் தனது திரைப் பயணத்தில் 46வது திரைப்படமாக உருவாகும் புதிய #கிச்சா46 திரைப்படத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களுடன் கிச்சா சுதீப் கைகோர்த்துள்ளார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் இதர அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கிச்சன் 46 படத்தை அறிவிக்கும் வகையில் ஒரு வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது.
இதனை தொடர்ந்து கிச்சா 46 படத்தின் டீசருக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் அதன் தாமதம் குறித்து, "அற்புதமான விஷயங்களுக்கு நேரம் எடுக்கும் கடைசியில் தரமான படைப்பு கிடைப்பதற்காக போஸ்ட் புரொடக்ஷனில் ஒரு சிறிய தாமதம் இருக்கிறது. கிச்சா சுதீப் அவர்களின் கிச்சா 46 திரைப்படத்தின் மீதி இருக்கும் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்காக எந்த ஒரு வாய்ப்பையும் நாங்கள் கைவிடவில்லை விரைவில் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தாணு அவர்கள் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்த கிச்சா 46 படத்தின் டீசர் வருகிற ஜூன் ஜூலை இரண்டாம் தேதி காலை 11 : 46 மணி அளவில் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அட்டகாசமான அறிவிப்பு இதோ…