உலக நாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். 64 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் என்றும் குறையாத அதே வேகத்தோடு ஒட்டு மொத்த இந்திய திரையுலகிற்கும் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக தயாராகும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.அந்த வகையில் முன்னணி இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தனது 233வது திரைப்படமாக உருவாகும் KH233 படத்தில் உலக நாயகன் நடிக்க இருக்கிறார். அதன் பின் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தனது 234 ஆவது திரைப்படமான KH234 படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்.
இதனிடையே இந்திய சினிமாவில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கர் உடன் இரண்டாவது முறையாக இணைந்து இருக்கும் உலக நாயகன் நடிப்பில் அடுத்த அட்டகாசமான படைப்பாக உருவாகி வருகிறது இந்தியன் 2. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு பிறகு தற்போது பம்பரமாக சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் ஷங்கர், உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களையும் ஒரே சமயத்தில் உருவாக்கி வருகிறார். முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் திரைப்படம் கமல்ஹாசன் அவர்களுக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற விபத்தின் காரணமாக தடைபட்டது. பின்னர் தடைகளை அத்தனையும் நீங்கிய பிறகு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தொடங்கி எந்த இடையூறும் என்று விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தையும் எட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் டப்பிங் பணியாற்றும் புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. டப்பிங் ஸ்டுடியோவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இருவரும் மிகுந்த கவனத்தோடு இந்தியன் 2 திரைப்படத்திற்கான டப்பிங்கில் பணியாற்றும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியன் 2 டப்பிங் பணிகளின் ஸ்பெஷல் வீடியோ இதோ…