உலக நாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் GLIMPSE ரிலீஸ் அறிவிப்புவெளியானது. கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் பிறகு அடுத்தடுத்து கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவருக்கும் திரைப்படங்கள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் முன்னணி இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தனது 233வது திரைப்படமாக உருவாகும் KH233 படத்தில் உலக நாயகன் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் திட்டமிட்டு இருந்த தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தின் தலைப்பை இந்த KH233 திரைப்படத்திற்கு வைக்கட்டும் இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தனது 234 ஆவது திரைப்படமான KH234 படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ரவி.K.சந்திரன் அன்பறிவு மாஸ்டர்கள் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களோடு சமீபத்தில் KH234 திரைப்படத்தின் துவக்க விழா நடைபெற்றது விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் ஷங்கர் உடன் 2வது முறையாக இணைந்திருக்கும் உலக நாயகன் நடிப்பில் அடுத்த அட்டகாசமான படைப்பாக உருவாகி வருகிற திரைப்படம் தான் இந்தியன் 2.
கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
எக்கச்சக்கமான தடைகளை கடந்து தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் அடுத்தடுத்த அட்டகாசமான அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக இந்தியன் 2 ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக வர காத்திருக்கிறது. இந்த நிலையில் அதன் முன்னோட்டமாக அனைவரும் எதிர்பார்த்த இந்தியன் 2 திரைப்படத்தில் முதல் டீசர் GLIMPSE வீடியோவாக இந்தியன் 2 AN INTRO என்ற வீடியோ வருகிற நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்திய இந்தியன் 2 GLIMPSE ரிலீஸ் அறிவிப்பு இதோ…