இயக்குனர் மணிரத்னம் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியின் KH234 படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த KH234 படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் இணைந்திருக்கும் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை படத்தில் உள்ள தற்போது வெளியிட்டுள்ளனர். இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக போற்றப்படும் “நாயகன்” திரைப்படத்திற்கு பின் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னம் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் KH234 திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் KH234 திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். கலை இயக்குனராக ஷர்மிஷ்டா ராய், ஆடை வடிவமைப்பாளர்களாக அமிர்தா ராம் மற்றும் ஏகா லக்கானி ஆகியோர் இணைந்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய போது, “மணிரத்னம் அவர்கள், KH234 திரைப்படத்தின் டீசருக்காக பணியாற்றி வருகிறார். வருகிற நவம்பர் 7ஆம் தேதி அந்த டீசர் வெளியாகும்” என தெரிவித்தார். உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி KH234 படத்தின் டீசர் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு KH234 திரைப்படத்தின் துவக்க விழா தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் KH234 திரைப்படத்தில் பணியாற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களை படக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்பும் தொடங்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன நேற்று முன்தினம் நவம்பர் 3ம் தேதி வெளிவந்த இந்தியன் 2 படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் கல்கி 2898AD படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். அடுத்ததாக தனது 233 வது திரைப்படமாக உருவாகும் KH233 திரைப்படத்தில் இயக்குனர் H.வினோத் உடன் உலகநாயகன் கைகோர்க்கிறார். இந்த KH233 படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே உலக நாயகன் தொடங்கிய “தலைவன் இருக்கின்றான்” திரைப்படத்தின் தலைப்பை இப்படத்திற்கு வைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் KH234 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் KH234 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மணிரத்னம் - உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் இணைந்திருக்கும் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…