தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதரித்து அசத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலின்.அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலிலும் தனது முத்திரையை பதித்து 2021-ல் நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று MLA-வாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் கடைசியாக சைக்கோ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கடந்த சில வருடங்களாக அரசியலில் செம பிஸியாக இருந்தாலும் படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து செய்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.இதனை தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி,கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.மாமன்னன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை பரியேறும் பெருமாள்,கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.ஏ.ஆர் ரஹ்மான்இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பஹத் ஃபாசில்,வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.பல முன்னணி நட்சத்திரங்கள் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனருடன் கைகோர்த்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Excited to announce our next, #MAAMANNAN directed by @mari_selvaraj, starring @Udhaystalin @KeerthyOfficial #FahadhFaasil #Vadivelu and music by @arrahman 🥁🎉👏@RedGiantMovies_ @thenieswar @editorselva @kabilanchelliah @kalaignartv_off @SonyMusicSouth @teamaimpr pic.twitter.com/BICc9DXnD4
— Red Giant Movies (@RedGiantMovies_) March 4, 2022