பல கோடி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து தற்போது அதிரடி ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக தி ரோட் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகும் ராம் - பார்ட் 1 திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக தயாராகும் ராம் - பார்ட் 2 திரைப்படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடிகை நயன்தாராவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகர் அரவிந்த்சாமி உடன் இணைந்து த்ரிஷா நடித்த சதுரங்க வேட்டை - 2 திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், அதேபோல் நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு காத்திருந்த த்ரிஷாவின் ராங்கி திரைப்படம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
இயக்குனர் A.R.முருகதாஸின் கதையில், எங்கேயும் எப்போதும் & இவன் வேற மாதிரி படங்களின் இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அவர்கள் தயாரித்துள்ள அனஸ்வரா ராஜன், ஜான் மகேந்திரன், லிஸ்ஸி ஆண்டனி மற்றும் கோபி கண்ணதாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் ராங்கி திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
பக்கா ஆக்ஷன் திரைப்படமா ராங்கி படத்திற்கு KA. சக்திவேல் ஒளிப்பதிவில், M.சுபாரக் படத்தொகுப்பு செய்ய C.சத்யா இசையமைத்துள்ளார். இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் பேசிய நடிகை திரிஷா ராங்கி திரைப்படம் குறித்தும் தனது திரையுலக பயணம் குறித்தும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில், தளபதி67 திரைப்படத்தில் நடிப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, “கொஞ்ச நாள் முன்னாடி நீங்கள் கேட்ட கேள்விக்கு கொடுத்த அதே பதிலை இப்போதும் கொடுக்க போகிறேன்… ராங்கியை பற்றி பேசலாம்.. தளபதி 67 பற்றி அடுத்த ஆண்டு(2023) பேசலாம். இன்னும் ஏழு எட்டு நாட்கள் தான். அப்போது பேசலாம்… அதை ஏன் இப்போது சொல்லவில்லை என்றால் இது நமது இடம் அல்ல. ஒரு படத்தைப் பற்றி கேட்டால் கூட, இப்போது ராங்கியை பற்றி பேசலாம். இதுவே ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு ராங்கியை பற்றி கேட்டிருந்தால் நான் பேசியிருக்க மாட்டேன். ஒரு இயக்குனர் தான் சொல்ல வேண்டும். சில விஷயங்கள் அந்த மாதிரி தான்… எனவே இப்போது சொல்லவில்லை என்றால், இந்த சமயத்தில் அது தேவையில்லை என்பது மட்டும் தான்…” என தெரிவித்துள்ளார். மேலும் தளபதி விஜய் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் ராங்கி திரைப்படம் குறித்தும் சுவாரஸ்யமாக பதிலளித்த த்ரிஷாவின் அந்த முழு பேட்டி இதோ…