தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகியாக திகழும் நடிகை த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக வலம் வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்ப இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் த்ரிஷா.

குந்தவை எனும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்கள் இதயங்களில் கொள்ளையடித்த நடிகை திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. அந்த வகையில் சதுரங்க வேட்டை-2 திரைப்படம் நிறைவடைந்தது நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், பொன்னியின் செல்வன்-2 திரைப்படமும் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்ததாக தமிழில் த்ரில்லர் படமாக தயாராகும் தி ரோட் மற்றும் மலையாளத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடிக்கும் ராம் ஆகிய திரைப்படங்கள் திரிஷா நடிப்பில் தயாராகி வருகின்றன. இதனிடையே முதல் முறை வெப்சீரிஸில் களமிறங்கியுள்ள த்ரிஷா காவல்துறை அதிகாரியாக நடிக்க, தெலுங்கில் தயாராகி வரும் வெப் சீரிஸ் பிருந்தா.

இயக்குனர் சூர்யா வங்களா இயக்கத்தில் உருவாகும் பிருந்தா வெப்சீரிஸை அவினாஷ் கொல்லா மற்றும் ஆஷிஷ் கொல்லா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். தினேஷ்.K.பாபு ஒளிப்பதிவு செய்யும் பிருந்தா வெப் சீரிஸ்க்கு சக்தி காந்த் கார்த்திக் இசையமைக்கிறார். விரைவில் சோனி லைவ் தளத்தில் பிருந்தா வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது பிருந்தா வெப் சீரிஸின் பாடப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள த்ரிஷா வெப்சீரிஸின் முதல் சீசன் விரைவில் வெளிவர தயாராகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அறிவிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். த்ரிஷாவின் அந்த பதிவு இதோ…