போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் ஆரவாரத்துடன் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதிரடி காட்சிகளுடன் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட துணிவு படத்தின் பாடல்கள் பின்னணி இசை முன்னதாக வெளிவந்து ரசிகர்களிடையே பெரும்வரவேற்பை பெற்றது. இந்நிலையில் துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் நமது கலாட்டா மீடியாவிற்கு அளித்த பேட்டியில் துணிவு படம் குறித்தும் துணிவு படத்திற்கான பாடல் உருவாக்கம் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் துணிவு படத்தில் அஜித் அவர்களின் குரலில் பாடல் தாயார் செய்ய முயற்சி செய்தீர்களா? என்ற கேள்விக்கு,

அவர் “அவரை பாட வைக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் பேச வைக்க ஒரு ஆசை இருந்தது. ‘gangsta’ பாடலில் இடையே வரும் rap பாடலுக்கு இடையே அவரை பேச வைக்க முயற்சித்தேன். ஆனால் பாடல் தொழில்நுட்ப உருவாக்கத்திற்கே நேரம் போதுமானதாக இருந்தது. அதன்பின் படத்திற்காக பேசிய ‘no guts no glory’ என்ற வசனத்தை பாடலில் சேர்த்து பயன்படுத்தினோம்”. என்று குறிப்பிட்டார்.

மேலும் மஞ்சு வாரியார் அவர்களுடைய குரல் ‘காசே தான் கடவுளடா’ பாடல் இல்லையே, அதுகுறித்த ட்ரோல்களை நீங்கள் பார்த்தீங்களா? என்ற கேள்விக்கு

“அது முழுக்க முழுக்க தொழில்நுட்ப தவறு தான், அவர்களுடைய குரல் தொழில்நுட்ப தவறுதலால் குறைந்து விட்டது. அதனால் அவர் குரல் கேட்கவில்லை. அது தெரியாமல் லிரிக் வீடியோ வில் அவரது காட்சி இடம் பெற்று விட்டது , அவருடைய குரலுடனான பாடல் படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. ஆனால் இங்கு தவறிவிட்டது. அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன், கூடிய சீக்கிரம் அந்த பாடலுடைய வீடியோ வரப்போகிறது அதில் கண்டிப்பாக அவர் பாடியது இருக்கும்.” என்று கூறினார்.

அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியர் சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்த துணிவு படத்தின் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது. அஜித் பாடல்கள் இதுவரை பாடியதில்லை. ஆனால் அவரை பாட வைக்க பல இயக்குனர்கள் முயற்சித்துள்ளனர். மங்காத்தா,வீரம், விவேகம், வேதாளம், வலிமை போன்ற அவரது படங்களின் பாடல்களில் அறிமுக வசனத்தை பேசியுள்ளார். அவர் பேசிய வசனங்கள் பெரும்பாலும் டிரண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் துணிவு படம் குறித்தும் பாடல் உருவாக்கம் குறித்தும் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு காணொளி இதோ..