'நேர்கொண்ட பார்வை' , 'வலிமை' படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் அஜித் இணைந்த திரைப்படம் ‘துணிவு’. இப்படம் பொங்கலையொட்டி பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுடன் இன்று வெளியானது தமிழகமெங்கும் ரசிகர்களின் பேராதரவோடு வெளியான துணிவு படத்தின் முன்பதிவு மும்முரமாக நடைபெற்றுகொண்டிருகிறது.
இந்நிலையில் துணிவு பட இயக்குனர் எச் வினோத் நமது கலாட்டா மீடியா பேட்டியில் பங்குபெற்றார் இதில் துணிவு படம் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் துணிவு படத்திற்கு பின் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைவது குறித்த கேள்விக்கு,
அவர், “கமல் ஹாசன் உடனான கூட்டணி குறித்த அறிவிப்பை அவர் சார்ந்த தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் அவர் சார்பிலும் தான் அறிவிக்க வேண்டும் அது ஒரு பெரிய செயல்பாடு. இதுகுறித்த தெளிவான அறிவிப்பு என் சார்பில் கொடுக்க முடியாது. கமல் ஹாசன் சார் மாதிரி நிறைய சினிமா தெரிந்த ஒருத்தருடன் சினிமா பத்தி கொஞ்சம் புரிதல் உள்ள ஒரு ஆள் வேலை பார்ப்பது என்பது பெரிய செயல்பாடு. இந்த கூட்டணி அமையவிருந்தால் அது குறித்து அவர் சார்பில் அறிவிப்பு வரும். அப்படி அவருடன் கூட்டணி அமைந்தால் அது கண்டிப்பாக ஒரு சுவாரஸ்யமான கதையாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
கமல் ஹாசன் திட்டமிட்டு பயன்படுத்திய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் கமல் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘விக்ரம்’. மிகப்பெரிய வெற்றி படமாக கமல்ஹாசனுக்கு அந்த படம் அமைந்ததால் சமீபகாலமாக இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் என்று தகவல் வெளியானது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் கமல் அதன் பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விருக்கிறார். பின் லோகேஷ் கனகராஜ் LCU வில் இணையும் வாய்ப்புள்ளது என்று தகவல். அதன்பின் வெற்றிமாறன், பா ரஞ்சித் என்று வரிசை கட்டி வைத்துள்ளார். யார் இயக்கவுள்ளார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முன்னதாக எச் வினோத் அவருடன் கதையாடலில் இருந்ததாக தகவல் வெளியாகி வைரலானது. சங்கர், மணிரத்னம் பின் கமல் தேர்ந்தெடுத்த இயக்குனர் யார் என்றே இன்றைய சினிமா வட்டாரம் அலசி வருகிறது.
மேலும் இயக்குனர் எச் வினோத் துணிவு படத்தை குறித்தும் அஜித் அவர்களுடன் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..