ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிரமம்மிப்பின் உச்சமாக உருவான இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கலை இயக்குனராக தோட்டா தரணி அவர்கள் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் முன்னணி கலை இயக்குனராக திகழும் தோட்டா தரணி அவர்கள் தனது ஒவ்வொரு படைப்புகளின் வாயிலாகவும் மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த தோட்டா தரணி அவர்கள் அவரது திரைப் பயணத்தின் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் சிவாஜி திரைப்படத்தில் பயன்படுத்திய ஒரு விசித்திரமான வைப்பர் கண்ணாடி பற்றிய விஷயங்களை நம்மோடு மனம் திறந்து பேசினார். இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்த திரைப்படம் சிவாஜி. ஏவிஎம் புரோடக்சன் தயாரிப்பில் உருவான சிவாஜி திரைப்படத்தில் கே.வி.ஆனந்த் அவர்களின் சிறப்பான ஒளிப்பதிவும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாசமான இசையும் சிவாஜி திரைப்படத்தை இன்னும் ரசிக்க வைத்தன. பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
இயக்குனர் ஷங்கரின் திரைப்படங்கள் என்றாலே திரைப்படத்தில் அமைந்திருக்கும் பாடல் காட்சிகளும் சண்டை காட்சிகளும் குறிப்பிட்டு பேசும் படியாக அமைந்திருப்பது வழக்கம். அந்த வகையில் சிவாஜி திரைப்படத்தில் இடம் பெற்ற ஸ்டைல் பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. வழக்கமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நிறத்தை விஷுவல் எஃபெக்ட்ஸ் மூலமாக மாற்றி அமைத்து மேற்கத்திய வெள்ளையர்களின் நிறத்தில் காண்பித்தது ரசிகர்களுக்கு புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அதிலும் குறிப்பாக இந்த பாடலில் பயன்படுத்தப்பட்ட ஒரு வைப்பர் கண்ணாடி ரசிகர்களின் புருவத்தை உயர்த்தியது. இந்நிலையில் இந்த கண்ணாடி குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பேசிய தோட்டா தரணி அவர்களிடம், இந்த கண்ணாடி சிவாஜி திரைப்படத்திற்காக செய்ததா? என கேட்டபோது, “இல்லை இது ஒரு கடையில் நான் பார்த்து பார்த்து வாங்கி வைத்தது தான். எங்காவது ஒரு இடத்தில் பயன்படுத்த வேண்டும் என நினைத்திருந்தேன். வாய்ப்பு கிடைத்தது… இயக்குனர் ஷங்கரிடம் கொண்டு போய் கொடுத்து, “இதை எங்காவது பயன்படுத்துங்கள் கொஞ்சம் பத்திரமாக இருக்கட்டும்” என கொடுத்தேன்." என பதில் அளித்தார்.
தொடர்ந்து அவரிடம், இதை பார்த்தீர்கள் உங்களுக்கு பிடித்தது வாங்கினீர்கள் ஆனால் இதை இயக்குனர் சங்கரிடம் கொடுக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்? என கேட்டபோது, “இல்லை அந்த சமயத்தில் அவர் அந்த திரைப்படம் இயக்கிக் கொண்டிருந்தார். எனக்கு தெரியும் அவர் இது மாதிரியான விஷயங்களை யோசிப்பவர் என்று... அவர் ஒரு படம் பண்ணும் போது முழுக்க முழுக்க அந்த படத்தை பற்றி மட்டுமே சிந்திக்க கூடியவர் அதை தவிர வேறு எங்கும் கவனம் செல்லாது…" இதை நான் மணிரத்தினம் அவர்களிடம் கொண்டு போய் கொடுக்க முடியாது” என பதில் அளித்துள்ளார். கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் பேசிய அந்த முழு பேட்டி இதோ...