இந்தியாவின் தலை சிறந்த கலைஞர்களில் மிக முக்கியமானவர் தோட்டா தரணி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல முக்கியமான படங்களுக்கு தேர்ந்த வடிவமைப்பை கொடுத்து அந்த படத்தின் சாரம் மாறாமல் அந்த படத்தின் தரத்தை அணுஅணுவாக உயர்த்தியவர் கலை இயக்குனர் தோட்டா தரணி. தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் இவரது படைப்பிற்கு வெகுமதியாக கிடைத்துள்ளது. மணிரத்தினம் அவர்களின் ஆஸ்தான கலை இயக்குனரான இவர் அவருடைய பெரும்பாலான படங்களுக்கு இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் இவர் பணியாற்றிய நாயகன், இந்தியன் ஆகிய படங்கள் தேசிய விருதினை இவருக்கு பெற்று தந்தது. ராஜா பார்வை தொடங்கி இன்று வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரை படத்திற்கு படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார். தோட்டா தரணி.
இவரது திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படங்களாக அமைந்த படங்கள் குறித்தும் தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய திரைப்படமாக வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
அதில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'சிவாஜி' படத்தில் இடம் பெற்ற 'சஹானா சாரல்' பாடலில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கண்ணாடி குடுவை ஷாட் குறித்தும் பிரம்மாண்ட கண்ணாடி செட் குறித்தும் பேசுகையில். "அந்த ஷாட் கேவி ஆனந்த் ஐடியா அது.. நான் அவரிடம் எப்படி எடுப்ப.. கேமிரா லென்ஸ் போவாதே என்று கேட்டேன். அவர் தனி டியூப் போன்ற சிறப்பு லென்ஸ் பயன்படுத்தி அந்த காட்சியை முடித்தார். அது அருமையான ஷாட் அது. அந்த கண்ணாடி குடுவை என்னிடம் ரொம்ப நாளாக என்னிடம் இருந்தது. நான் அது வைத்ததும் ஆனந்த் பெரிதாக கிடைக்குமா என்று கேட்டார். எதுக்குனு கேட்டபின் அவர் விவரித்தார் பின் அது பெரிய அளவில் கிடைக்குமா என்று தேடி பார்த்தேன் கிடைத்தது. ஒரு இயக்குனருக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க வேண்டியது கலை இயக்குனரின் வேலை. அதே போல் ஒளிப்பதிவாளருக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுப்பதும் வேலை தான். அதைதான் நாங்கள் செய்தோம்.” என்றார் கலை இயக்குனர் தோட்டா தரணி.
மேலும் அந்த பாடலுக்காக அமைக்கப்பட்ட கண்ணாடி செட் குறித்து பேசுகையில், “படமெடுக்கும்போது லைட் படக்கூடாதுனு முக்கோண வடிவில் ஒரு செட் போட்டேன். இதில் கீழிலிருந்து லைட் அடிச்சா ஓரங்களில் தான் படுமே தவிர நேராக வராது. உருண்டை வடிவில் செட்டில் மேலிருந்து வைக்கலாம். தரைத்தளத்தில் வரும் போது சில விஷயங்கள் லைட் மறைக்க செய்ய வேண்டியுள்ளது. அதனால் நிறங்கள் பயன்படுத்தினோம். சில இடங்களில் நிறங்கள் ஒட்டினோம். சில இடங்களில் நிறங்கள் அடித்தோம். 8 அடிக்கு ஒரு கண்ணாடி. பின் 12 அடிக்கு ஒரு கண்ணாடி அது மேல இருக்குறது எல்லாம் அக்ரெலிக். அதே போல் தரைத்தளத்திலும் அக்ரெலிக் தான். தண்ணீர் 45 அடி மேலிருந்து வந்தது. சங்கர் ரொம்ப திறமையானவர். அவரிடம் வேலைசுமை தெரியாது. சில இயக்குனர்கள் அவர்களுடன் வேலை பார்க்கும் போது விரும்பி வேலை பார்க்கலாம். மொத்தமாவே அது கமர்ஷியல் திரைப்படம் தான். இருந்தாலும் அதிலும் புதுமை இருக்கும். அது ஷங்கரும் புதுமை விரும்புவர்" என்றார் தோட்டா தரணி
மேலும் கலை இயக்குனர் தோட்டா தரணி பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு நேர்காணல் இதோ...