கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த தொடர். சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வந்தனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றிருந்தது.

இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.கொரோனாவை அடுத்து விறுவிறுப்பாக சென்று வந்த திருமணம் தொடர் நிறைவு பெற்றது.

இந்த தொடரின் மூலம் சித்து மற்றும் ஸ்ரேயா இடையே காதல் மலர்ந்தது விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.ஸ்ரேயா அஞ்சன் விஜய் டிவியின் அன்புடன் குஷி தொடரில் தொடரின் ஹீரோயினாக நடித்து வந்தார் இந்த தொடரும் சமீபத்தில் நிறைவுக்கு வந்தது.

இவற்றை தவிர சில ஆல்பம் பாடல்கள்,வெப் தொடர்கள் உள்ளிட்டவற்றில் இணைந்து நடித்து வந்தனர்.இருவருக்கும் கடந்த நவம்பர் 21ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.பல ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வந்தனர்.இவர் நடித்து செம ஹிட் அடித்த திருமணம் சீரியலின் ரொமான்டிக் காட்சிகளுடன் கலர்ஸ் தமிழ் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இவர்களின் முத்தக்காட்சி அடங்கிய இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Colors Tamil (@colorstvtamil)