விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே மாதம் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. நடிகை அடா ஷர்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து யோகிதா பிகானி, சோனியா பலானி, சித்தி இத்தானி, விஜய் கிருஷ்ணா,தேவ தர்ஷினி, பிரனை பசுவாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரஷான்தனு முஹபத்ரா ஒளிப்பதிவு செய்ய விரேஷ் ஸ்ரீவல்சா இசையமைத்துள்ளார்.
இந்து மத பெண்களை ஏமாற்றி மதம் மாற்றம் செய்ய வைத்து தீவிரவாதிகளாக மாற்றப்படுவதை கதைக்கருவாக கொண்டுள்ள இப்படத்தின் முன்னோட்டம் முதலே இப்படத்திற்கு இந்தியாவில் பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. வங்கதேச மாநிலங்களில் இப்படத்தினை அதிகாரபூர்வமாக தடை செய்தனர்.
இருப்பினும் திட்டமிட்டபடி சர்ச்சைகள் எதிர்ப்புகளை தாண்டி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியாவில் வெளியானது. தமிழ் நாட்டில் ஒரே நாளில் திரையரங்க உரிமையாளர்களால் இப்படம் மாற்றப்பட்டது. மேலும் சில மாநிலங்களிலும் இப்படம் ஒரு நாள் தாண்டவில்லை. வட இந்தியா மாநிலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் ஆதரவு இப்படத்திற்கு எழ தொடர்ந்து அம்மக்களினால் படம் வரவேற்பை பெற்று அதன்படி இந்தியாவில் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2.50 கோடி பெற்றது. திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வெளியாகி குறைந்த பட்ச வசூலை அடைந்து மிக மோசமான நிலையில் இருந்தது.
பின் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை ஒருபுறம் உச்சநீதிமன்றத்தை நாடி தடையை நீக்கிய படக்குழு. என்று தொடர்ந்து இப்படம் மக்களிடம் பேசப்பட்டது. மேலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை உலகளவில் 37 நாடுகளில் வெளியிட்டது படக்குழு.. தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று பேசப்பட்டு வரும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தற்போது நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்னும் பல மாநிலங்களில் பல மாநில திரையரங்குகளில் வெற்றிகரமாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கின்றது.
அதன்படி 24 நாளில் உலகளவில் இப்படம் ரூ224.47 கோடி வசூல் பெற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 200ரூ கோடி என்ற சாதனையை பெற்ற தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தற்போது 250கோடி வசூலை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வு படக்குழுவினர் தற்போது கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த தகவலை ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.