மக்களின் நம்பத்தக்க செய்தி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்பது நமது கலாட்டா நிறுவனம்.செய்திகள் மட்டுமின்றி பலருக்கும் அவர்களது திறமையை பாராட்டி அவ்வப்போது விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்து வருகிறோம்.அந்த வகையில் இந்த வருடம் எந்த ஒரு இணையதளமும் நடத்தாத அளவு மிக பிரம்மாண்டமாக திரைத்துறையினரை கௌரவிக்கும் படி The Galatta Crown 2022 விருது விழா மே 8ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
திரைத்துறையில் சாதித்த பல அறிமுக கலைஞர்களுக்கும் பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் கௌரவித்து கலாட்டா பெருமை படுத்தியது.மேலும் சில அரசியல் சார்ந்த விருதுகள் மற்றும் திரைத்துறையினர் பங்கேற்ற உரையாடல் என பல அம்சங்கள் அடங்கிய மாபெரும் நிகழ்வாக இந்த விருது விழா நேற்று நடைபெற்றது.பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் The Galatta Crown 2022வில் முக்கிய விருந்தினராக பங்கேற்றார்.
இவரை தவிர சிவகார்த்திகேயன்,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,க்ரிதி ஷெட்டி,பிரியங்கா மோகன்,கல்யாணி ப்ரியதர்ஷன்,அருண் விஜய்,யோகி பாபு,வெங்கட் பிரபு,விக்னேஷ் சிவன்,அனிருத்,ஜீ வி பிரகாஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.இந்த பிரம்மாண்ட நிகழ்வின் வீடியோக்கள் ஒவ்வொன்றாக ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டு வருகிறது.
Global King of Indian Music மற்றும் சிறந்த இசையமைப்பாளர் என இரண்டு விருதுகளை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் அள்ளினார்.விருது பெற்ற பின் விருது வெல்ல உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அனிருத்.ரன்வீர் சிங் உடன் இணைந்து அரபிக்குத்து பாடலுக்கு இணைந்து நடனமாடி அசத்தினார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது