தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கொரோனாவிற்கு பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பல திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் படமாக மாஸ்டர் உள்ளது என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.இந்த படம் OTT-யிலும் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தியது.
தற்போது இந்த படம் பிரான்ஸில் உள்ள புகழ்பெற்ற திரையரங்கில் வரும் மே 19ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது என்ற தகவல் வெளியாகவுள்ளது.மாஸ்டர் படம் பிரான்ஸில் திரையரங்குகளில் வெளியாவதை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
Billets en vente pour voir le film en #GrandLarge le 29 Mai !
— Le Grand Rex (@LeGrandRex) May 12, 2021
▶️ https://t.co/xn4eoJOHkh https://t.co/cXQrK6q5NO