தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் வாரிசு.

தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் சரத்குமார்,பிரபு,பிரகாஷ்ராஜ்,ஜெயசுதா,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,ஷாம்,சங்கீதா,யோகி பாபு,சம்யுக்தா ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி செம வைரலாகி வந்தன.படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சில காரணங்களால் இந்த பாடல் வெளியாகாது என்ற தகவல் கிடைத்தது.

இருந்தாலும் தீபாவளி அன்று ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ஆக ஒரு போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.பொங்கல் வெளியீட்டை உறுதி செய்து அட்டகாசமான , செம மாஸான விஜயின் ஒரு போஸ்ட்டரை வாரிசு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.அடுத்த வாரத்தில் இருந்து அப்டேட்கள் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Happy Diwali nanba 🧨

Next week la irundhu summa pattasa irukum 🔥#VarisuPongal #Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @KarthikPalanidp @Cinemainmygenes @scolourpencils @vaishnavi141081 #Varisu pic.twitter.com/M9KuWSfhuE

— Sri Venkateswara Creations (@SVC_official) October 24, 2022