தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவர் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை வைத்துள்ளார்.இந்த காருக்கான நுழைவு வரி அதிகமாக இருக்க அதற்கு விலக்கு அளிக்கும்படி விஜய் நீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கின் தீர்ப்பு சில மாதங்களுக்கு முன் வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் வழக்கை தள்ளுபடி செய்ததோடு , விஜயை கடுமையாக விமர்சித்து பேசி 1 லட்சம் அபராதமும் விதித்திருந்தார்.தீர்ப்பு வந்த சில வாரங்களில் வரிபாக்கியை செலுத்திய விஜய்.தான் கடினமாக உழைத்து வாங்கிய காருக்கு வரிவிலக்கு கேட்டு சட்டப்படி சரியான முறையில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதோடு கடின உழைப்பில் வாங்கிய காருக்காக , தன்னை பற்றி நீதிபதி சில கடுமையான விமர்சனங்களை தெரிவித்து, தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தி மனஉளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார் என்றும் விஜய் தரப்பில் தெரிவித்திருந்தனர்.இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.விஜயின் மேல்முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் விஜய் மீது தனி நீதிபதி சுப்ரமணியம் சொன்ன எதிர்மறையான கருத்துக்களை நீக்கி அதிரடியாக உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.