தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வாரிசு திரைப்படத்தின் OST ட்ராக்குகள் குறித்த முக்கிய அறிவிப்பை இசையமைப்பாளர் தமன் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாகவும் இந்திய சினிமாவில் பல கோடி ரசிகர்களின் அபிமான ஹீரோவாகவும் வலம் வரும் தளபதி விஜய் இதுவரை தனது திரைப் பயணத்திலேயே எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது 67-வது திரைப்படமாக தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்துள்ள லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு தொடரந்து விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த சில தினங்களுக்கு முன் முற்றிலுமாக நிறைவடைந்தது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸாகவுள்ளது.
அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார். முன்னதாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீசாகி பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடும் திரைப்படமாக ரசிக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபல்லி இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைத்துள்ளார்.
முன்னதாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் OST ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேட்டபோது, OST ட்ராக்குகளை கடந்த ஜூலை மாதத்திற்குள் வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி OST ட்ராக்குகள் வெளிவராததால் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா சர்ப்ரைஸ் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் தமன் வாரிசு திரைப்படத்தின் மொத்த OST ட்ராக்குகளின் பட்டியலை தற்போது வெளியிட்டு இருக்கிறார். இதில் கூடுதலாக புதிய ஒரு டிராக்கையும் இணைத்து மொத்தம் 22 டிராக்குகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். வேடர்கள், தலைவன், அதிர்வு, அம்மாவின் தாலாட்டு, ஆமி ஆமி ரீமிக்ஸ், அதே நிலா, காவலன், ஏக்கம், ரத்தம், பாஸ் ரிட்டன்ஸ், காலம், ஆட்டநாயகன், பகை, தர்மயுத்தம், துருப்பு, திருப்பி கொடுக்கும் நேரம், தளபதீ, உறவு, ரஞ்சிதம், அப்பாவின் ஆசை, அம்மாவின் ஆசை, முதல் நாயகன் என 22 OST டிராக்குகள் வருகிற ஆகஸ்ட் 17ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தற்போது தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இசையமைப்பாளர் தமனின் அந்த பதிவு இதோ…