இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் லியோ திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய காட்சி ஒன்றை பட குழுவினர் தற்போது சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகிள்ளது. ரிலீஸான 12 நாட்களில் 540 கோடிகளுக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்திருக்கிறது லியோ திரைப்படம். ஒருபுறம் ரசிகர்களால் கொண்டாடப்படும் லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாதி குறித்து பல்வேறு விதமான கலவையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் படத்தின் ஓட்டத்தோடு ஒட்டாமல் இருப்பதாக எதிர்மறை விமர்சனங்கள் குவிந்தன.
இருப்பினும் தளபதி விஜயின் ரசிகர்களுக்கு அந்த பிளாஷ் பேக் காட்சியில் இருக்கும் தளபதி விஜயின் துள்ளலான நடிப்பும் “நா ரெடி” பாடலும் வெகுவாக கவர்ந்தது. இதனிடையே படத்தின் ரிலீஸுக்கு பிறகு பேட்டி அளித்த படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அந்த ஃப்ளாஷ் பேக் காட்சிகள் குறித்து பேசிய போது, "அந்த ஃப்ளாஷ் பேக் இயக்குனருடைய PERSPECTIVE-லோ அல்லது படத்தின் நாயகனாக நடித்திருக்கும் தளபதி விஜயின் பார்த்திபன் கதாபாத்திரத்தின் PERSPECTIVE-லோ அல்லது படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்களின் PERSPECTIVE-லோ இல்லாமல் அதுவரை கதைக்கு சம்பந்தமே இல்லாமல் இருந்த ஒரு மூன்றாவது மனிதரான மன்சூர் அலிகான் நடித்திருக்கும் இருதயராஜ் டிசோசா கதாபாத்திரத்தின் PERSPECTIVE-ல் தானே சொல்லப்பட்டு இருக்கிறது. அவர் சொன்னது நிஜமாகத்தான் இருக்கும் என்று எடுத்துக்கொள்ள முடியாது அல்லவா அது பொய்யாகவும் இருக்கலாம்" என தெரிவித்திருந்தார். அதேபோல் ரிலீசுக்கு பிறகு தற்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களும் இதே பதிலை கொடுத்திருக்கிறார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சுவாரசியத்தை கிளப்பி இருக்கிறது. இதனிடையே இந்த PERSPECTIVE குறித்து தற்போது பட குழுவினர் பகிர்ந்து கொள்ளும் இந்த விஷயங்களும் பொய்யாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் மீண்டும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த PERSPECTIVE குறித்த விஷயத்தின் உண்மையை வெளிப்படுத்தும் வகையில் மன்சூர் அலிகானின் இருதயராஜ் டிசோசா கதாபாத்திரம் தனது கதையை சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பு பேசிய ஒரு முக்கிய காட்சியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. உண்மையில் படத்தில் இந்த குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இந்த காட்சி படத்தில் வைக்கப்பட்டு இருந்தால் இருதயராஜ் டிசோசா கேரக்டர் சொல்ல போகும் கதை பொய் தான் என ரசிகர்கள் மிகவும் வெளிப்படையாக தெரிந்து கொள்வார்கள் என்கிற காரணத்திற்காக அதை மறைத்து அந்த காட்சியை படத்திலிருந்து நீக்கி உள்ளனர்.
தற்சமயம் இது தொடர்பாக நிறைய விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களிடையே நிறைய டிகோடிங் நடைபெற்று வரும் சூழலில் இந்த நீக்கப்பட்ட காட்சி சற்று முன்பு வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. "அவன் அவன் 1008 கதை சொல்லுவான் ஒவ்வொன்னுக்கும் நிறைய PERSPECTIVE... இது என்னோட PERSPECTIVE. 1999" என இருதயராஜ் டிசோசாவாக மன்சூர் அலிகான் பேசும் லியோ படத்தின் அந்த நீக்கப்பட்ட காட்சி இதோ...