ஒட்டுமொத்த தளபதி விஜய் ரசிகர்களையும் எக்கச்சக்கமாக உற்சாகப்படுத்தும் வகையில் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து சர்ப்ரைஸாக புதிய BTS வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பீஸ்ட் திரைப்படத்தின் முக்கிய சண்டை காட்சிக்காக தளபதி விஜய் ரோலர் பிளேடுகளில் பயிற்சி செய்யும் புதிய BTS வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. ரோலர் பிளேடு அணிந்து கொண்டு, சண்டைக் காட்சிக்காக தளபதி விஜய் பயிற்சி எடுப்பதும் அதை ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு மாஸ்டர்கள் மேற்பார்வை இடுவதும் என அட்டகாசமான ஒரு மேக்கிங் வீடியோவாக தற்போது வந்திருக்கும் இந்த புதிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட்டாகி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கலையான விமர்சனங்களை சந்தித்தபோதும் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
தளபதி விஜய் உடன் முதல் முறை இணைந்த பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவன், ஷாஜி சென், வி.டி.வி கணேஷ், அங்கூர் விகல், அபர்ணா தாஸ், சதீஷ் கிருஷ்ணன், ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, ஷிவா அரவிந்த், சுஜாதா பாபு, லில்லிபுட், ப்ருத்வி ராஜ், செல் முருகன், சுப்பலட்சுமி, பவன் சோப்ரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பு செய்த பீஸ்ட் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்திருந்தார். படம் எவ்வளவு பெரிய அளவில் ரீச் ஆனதோ அதைவிட மிகப்பெரிய அளவில் அனிருத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் வேற லெவல் ரீச் ஆகின சொல்ல வேண்டும். படத்தின் முதல் பாடலாக வெளிவந்த அரபிக் குத்து பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை குழப்பி உலகம் முழுக்க மிகப்பெரிய வரவேற்பு பெற்று யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அதேபோல் ஜாலியோ ஜிம்கானா பாடலும் பீஸ்ட் மோட் பாடலும் வைரல் ஹிட் அடித்தன.
இயக்குனர் நெல்சனின் வழக்கமான டார்க் காமெடியில் பக்கா ஆக்சன் என்டர்டைனர் படமாக பீஸ்ட் திரைப்படம் பலருக்கும் பிடித்த படமாக இருந்த போதும் விமர்சன ரீதியில் சில எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. குறிப்பாக படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தன. படத்தின் முதல் காட்சியிலேயே மிக நீளமான ஒரு மிரட்டலான ஆக்ஷன் காட்சி, அதன் பிறகு மால் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட போது உள்ளே நடக்கும் ஒவ்வொரு சண்டை காட்சிகளும் ஒவ்வொரு விதத்தில் ஸ்பெஷலாக இருந்தன. அப்படி ஒரு ஸ்பெஷல் சண்டை காட்சிதான் தளபதி விஜய் ரோலர் பிளேடு அணிந்து சண்டையிடும் ஒரு சண்டைக்காட்சி. இந்த சண்டைக் காட்சி குறித்து அப்போதே தொழில்நுட்ப கலைஞர்கள் பேட்டிகளில் பேசியிருந்த போதும் தற்போது அந்த ரோலர் பிளேடுகளில் தளபதி விஜய் பயிற்சி செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர் அந்த கலக்கலான பீஸ்ட் BTS வீடியோ இதோ…