கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக இல்லை.உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன,ஷூட்டிங்குகள் ஆரம்பித்தன.
மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதாலும்,ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான தொடர்களையும்,படங்களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது ஒளிபரப்பாகி வந்த விறுவிறுப்பான தொடர்களையும் முதலில் இருந்து ஒளிபரப்பி வருகின்றனர்.பலரும் இந்த தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும்,படங்களையும் பார்த்து வருகின்றனர்.
அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.லாக்டவுன் தொடங்கியது முதல் இப்போது வரை ஒளிபரப்பட்ட படங்களை வைத்து அதிகம் பார்க்கப்பட்ட ஹீரோவின் படங்களின் வரிசையில் ஒரு லிஸ்ட் வெளியாகியுள்ளது,இவை BARC வெளியிட்ட டேட்டாக்களை வைத்து தயார்செய்யப்பட்டது.இதில் அதிகமாக பார்க்கப்பட்ட ஹீரோவின் வரிசையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் தளபதி விஜய்.117.9 மில்லியன் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.இரண்டாவது இடத்தில் 76.2 மில்லியனுடன் ராகவா லாரன்ஸ் உள்ளார்.மூன்றாவது இடத்தில் 65.8 மில்லியனுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார்.நான்காவது இடத்தில 58.8 மில்லியனுடன் அக்ஷய் குமார் உள்ளார்.ஐந்தாவது இடத்தில் 56.9 மில்லியனுடன் பிரபாஸ் உள்ளார்.இந்திய அளவில் சூப்பர்ஸ்டார்களை பின்னுக்கு தள்ளி விஜய் முதலிடம் பிடித்துள்ளதை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
In Last 15 weeks since Lock down Week(13-27) 2020, Most Viewed Actors on Indian Television across all language based on #BARC Impression@actorvijay: 117.9 Million @offl_Lawrence: 76.2 Mn@rajinikanth: 65.8 Mn@akshaykumar: 58.8 Mn#Prabhas: 56.9 Mn
— Mithun K Raman (@mithunraman) July 19, 2020
Biggest Television Brands! pic.twitter.com/EsrfXWBn2Q