கடந்த ஆண்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக பீஸ்ட் வெளியானது. இப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹ்சா ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருப்பார்.
ஆரவாரமாக கொண்டாட்டத்துடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. பின் டிஜிட்டல் உரிமம் பெற்ற நெட் பிலிக்ஸ் ல் வெளியாக தளபதி விஜயின் பீஸ்ட் படத்தை தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும் எதிர்மறையான கருத்துகளையும் பெற்றது. திரைப்படம் ரசிகர்களை முழுமையாக திருப்தி பெற முடியமால் போக விட்டாலும் படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது.
குறிப்பாக அரபிக் குத்து பாடல். நடிகர் சிவகார்த்திகேயன் இப்பாடலுக்கு வரிகள் எழுத பின்னணி பாடகி ஜோனிதா காந்தியுடன் இசைமைப்பாளர் அனீருத் இப்பாடலை பாடியிருப்பார். திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்களின் கவனத்தை பெற்று உலகளவில் இணையத்தில் டிரெண்ட் ஆனது. மேலும் யூடியூப் தளத்தில் இந்த பாடல் தற்போது லிரிக்கல் வீடியோவாக 510 மில்லியன் பார்வையாளர்களையும் வீடியோ பாடலாக 471 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து மிகப்பெரிய சாதனையை செய்தது. இதையடுத்து அரபிக் குத்து பாடல் ஸ்பாட்டிபை இசை தளத்தில் 15 கோடி ஸ்ட்ரீம்களை தற்போது கடந்து மேலும் புது சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் அதிகம் முறை கேட்கபட்ட தமிழ் பாடல் என்ற பட்டியலில் தொடர்ந்து முன்னிலை படைத்து வருகிறது. இதையடுத்து தளபதி விஜய் ரசிகர்களுடன் அனிருத் ரசிகர்கள் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இச்சாதனையை இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
தளபதி விஜய் – அனிருத் கூட்டணியில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்களை எளிதில் கவர்ந்து இணையத்தில் புது புது சாதனைகளை படைத்து வருகிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் இடம் பெற்ற முதல் பாடல் ‘நா ரெடி’ பாடலும் தற்போது ரசிகர்களின் விருப்ப பாடலாக மாறி டிரெண்ட்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.