விஜய் டிவியில் சில சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை இயக்கி தனது உழைப்பால் தமிழ சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளவர் நெல்சன் திலீப்குமார்.தான் முதலில் சிம்புவுடன் தொடங்கிய வேட்டை மன்னன் படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.இதனை அடுத்து சில வருட இடைவேளைக்கு பிறகு திரைப்படங்களுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார் நெல்சன்.
நயன்தாரா நடிப்பில் உருவான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார் நெல்சன்.வித்தியாசமான காமெடி படமான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் அடித்தது.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இதனை அடுத்து தனது நண்பர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தினை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.இதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் Beast படத்தினை இயக்கும் வாய்ப்பினை பெற்றார் நெல்சன்.தனது இரண்டாவது படத்தின் ரிலீஸிற்கு முன்பே அடுத்த படத்தின் வேலையை தொடங்கினார்.மூன்றாவது படத்திலேயே பெரிய ஹீரோ பெரிய பேனர் என்று நெல்சன் தனது உழைப்பால் உயர்ந்தார்.Beast படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான கோலமாவு கோகிலா வெளியாகி மூன்று ஆண்டுகளை நேற்றுடன் நிறைவு செய்தது.இதனை முன்னிட்டு தன்னுடன் கடந்த மூன்று வருடங்களாக பயணித்து வரும் தனது உதவி இயக்குனர்களுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நெல்சன்.இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.