பல கோடி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் திகழும் தளபதி விஜய் அடுத்ததாக லியோ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்துள்ள லியோ பிளடி ஸ்வீட் திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்பு வீடியோ கடந்த பிப்ரவரி 3ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு தொடரந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்சமயம் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் மற்றும் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீசாகி பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடும் திரைப்படமாக ரசிக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபல்லி இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வரும் விவேக், வாரிசு திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் கூடுதல் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் அவர்களை சந்தித்த விவேக்கிற்கு வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்கு பரிசாக தளபதி விஜய் முத்தம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாடலாசிரியர் விவேக், "சில உறவுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உங்களுடன் இருக்கும் இந்தப் பயணம் நம்ப முடியவில்லை. எனக்கு ஒரு அண்ணன் போல என் மீது அன்பையும் அக்கறையும் காட்டுகிறீர்கள். என்னுடைய இந்த கலை பயணத்தில் இந்த ஒரு அழகான தருணத்தை எதுவும் வெல்ல முடியாது" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்தப் பதிவு மற்றும் புகைப்படம் இதோ…