தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் 2021 பொங்கலை முன்னிட்டு வெளியானது.
கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வெற்றி படமாக மாறியது மாஸ்டர்.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் Beast படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை அடுத்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.இந்த படத்தினை தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி இயக்குகிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.இந்த படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இந்த படம் மிக பிரம்மாண்டமான படமாக உருவாகும் என படத்தின் இயக்குனர் வம்சி ஒரு டிவி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
"#Thalapathy66 is going to be an another big film in my career. My focus is now on @Vijay66OfficiaI only." - Director #VamshiPaidipally #Vijay66 #దళపతి66 @actorvijay @directorvamshi pic.twitter.com/zvmuQEDzol
— #Thalapathy66 (@Vijay66OfficiaI) November 11, 2021