தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் 2021 பொங்கலை முன்னிட்டு வெளியானது.
கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வெற்றி படமாக மாறியது மாஸ்டர்.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் Beast படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை அடுத்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.இந்த படத்தினை தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி இயக்குகிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.இந்த படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தின் இயக்குனர் சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்த படத்திற்காக விஜயை முதல் முறையாக சந்தித்தது குறித்து தெரிவித்துள்ளார்.அவரை எப்படியாவது மீட் செய்து கதை சொன்னால் போதும் என்று தான் சென்றேன் அவர் ஓகே சொல்லுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பெரிய நடிகராக இருந்தாலும் அதனை சற்றும் காட்டிக்கொள்ளாமல் மிகவும் எளிமையாக இருந்தார்.இது பெரும்பாலும் தமிழ் படத்தை போலவே இருக்கும் என்றும் அரசியல் படமாக இருக்காது தோழா,மஹரிஷி போல எமோஷனல் கனெக்ட் உள்ள படமாக இதுவும் இருக்கும்.ஹீரோயின் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை டிசம்பர் மாதத்தில் படத்தின் அப்டேட்கள் வெளிவர தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.
Director @directorvamshi about his 1st meeting with Thalapathy @actorvijay 😉#Beast #Master #Thalapathy66
— Vijay Fans Trends (@VijayFansTrends) November 2, 2021
pic.twitter.com/b0b9TY4XjS
#Thalapathy66
— Vijay Fans Trends (@VijayFansTrends) November 2, 2021
• Not a Political movie
• Very emotional movie
• updates from December
- @directorvamshi #Beast #Master @actorvijay
pic.twitter.com/sPcOjeph4K