தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.கொரோனாவுக்கு பிறகு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மாஸ்டர்.

மக்கள்செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.மாளவிகா மோஹனன்,கௌரி கிஷான்,சாந்தனு,பூவையார்,அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் OTT தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருந்தது ஆனால் கொரோனா காரணமாக இந்த ஷூட்டிங் தள்ளிப்போனது.படத்தின் இயக்குனர் நெல்சன் பிறந்தநாள் 21ஆம் தேதியும் படத்தின் நாயகன் விஜயின் பிறந்தநாள் 22ஆம் தேதியும் வருவதை அடுத்து , படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே ரசிகர்கள் பர்ஸ்ட்லுக் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Enna nanba? First look ah? #Thalapathy65FLon21st #Thalapathy65FirstLook @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/11buRhwU3Y

— Sun Pictures (@sunpictures) June 18, 2021