வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் அசுரன். தனுஷ், கென் மற்றும் மஞ்சு வாரியரின் அசத்தலான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தது இப்படம். தாணு தயாரித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். தனுஷின் மூத்த மகனாக டீஜே நடித்தார். முதல் படம் என்று கூற முடியாத அளவிற்கு தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் டீஜே.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டிக்டாக் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் ரசிகர்களுடன் லைவ் சேட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டீஜே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அசுரன் படத்தில் இடம்பெற்ற அப்பாவுடன் இருக்கும் சென்டிமென்ட் காட்சியை பகிர்ந்துள்ள அவர், நான் பொதுவாக அம்மா பையன்தான். ஆனால், இந்த சீன் எமோஷனலாக எனக்கு அப்பாவின் பாசத்தை நினைவுபடுத்தும் என அவர் பதிவிட்டுள்ளார்.