தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வந்த மாரிமுத்து அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானார். தனக்கென தனி பாணிகள் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் மறைவு அவரது ரசிகர்கள், குடும்பத்தார் மற்றும் பிரபலங்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று செப்டம்பர் 8ம் தேதி காலை தனது டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருந்த மாரிமுத்து அவர்கள் திடீரென அசோகரின் ஏற்பட்டு மருத்துவமனைக்கு விரைந்த நிலையில் அதி தீவிர மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் அனைத்தும் அவரது சொந்த ஊரான தேனியில் நாளை நடைபெற இருக்கிறது. உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கி தற்போது நடிகராக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இயக்குநரும், பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்." என குறிப்பிட்டு இரங்கல் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
இயக்குநரும், நடிகருமான திரு. மாரிமுத்து அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி:
கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் திரு. மாரிமுத்து அவர்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்தவரும் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில்,
“திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். #Marimuthu” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அந்த இரங்கல் அறிக்கைகள் இதோ…
திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
— Udhay (@Udhaystalin) September 8, 2023
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். #Marimuthu pic.twitter.com/DhaTHSi4hs