தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது ஸ்டார் விஜய் தொலைக்காட்சி. ரசிகர்களின் ரசனைக்கேற்ப புதுப்புது நிகழ்ச்சிகளை கொடுப்பதில் மாற்ற சேனல்களுக்கு முன்னோடி சேனலாக என்றுமே ஸ்டார் விஜய் டிவி திகழ்ந்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எப்போதும் உண்டு.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை போன்று ஒரு நிகழ்ச்சியை இன்று வரை எந்த தொலைக்காட்சி நிறுவனமும் வெற்றிகரமாக நடத்தியது இல்லை.ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி இடம் உண்டு.

தென்னிந்திய திரை உலகில் பல பாடகர்களை கொடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியைப் பற்றி நாம் பேசி தெரியவேண்டியதில்லை. விஜய் டிவி திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்து ஒளிபரப்பும். மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்த மிகச் சிறந்த திரைப்படங்களை ஒளிபரப்பும் உரிமத்தை தன் வசமாக்கும் விஜய் தொலைக்காட்சி மீண்டும் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை தட்டிக் தூக்கியுள்ளது.

இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் RRR திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பெற்று விஜய் டிவி ஒளிபரப்ப உள்ளது.தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR இணைந்து நடிக்கும் RRR திரைப்படத்தில் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் மற்றும் நடிகை ஆலியா பட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். முன்னதாக இயக்குனர் SS.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் உரிமத்தையும் விஜய் டிவி பெற்றிருந்த நிலையில் RRR திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமத்தையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

#RRRMovie pic.twitter.com/TK5djusw82

— Vamsi Kaka (@vamsikaka) May 26, 2021