குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து நிற்பவர் யோகி பாபு.காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார் யோகி பாபு.அடுத்ததாக சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்புக்கென்றும்,காமெடிக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.ஷாருக் கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் ஜவான் படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.கடந்த 2020-ஆம் ஆண்டு பார்கவி என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு முதலில் ஒரு ஆன் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.தங்கள் மூத்த குழந்தைக்கு விசாகன் என யோகிபாபு-பார்கவி ஜோடி பெயரிட்டிருந்தனர்.இன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை பலரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த மகிழ்ச்சியூட்டும் நாளில் யோகிபாபுவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவலை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.யோகிபாபு-பார்கவி தம்பதியினருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.