தமிழ் திரையுலகில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் இரண்டாவது முறை கூட்டணி அமைக்கும் இப்படம் மிரட்டலான ஆக்ஷன் கதைகளத்தில் உருவாகவுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படதொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மாத்திவ் தாமஸ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப் மற்றும் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் இணையத்தில் தகவல் வைரலாகி வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ஒவ்வொரு பின்னணி கதைகளும் உருவாகி வருகிறது. அதன்படி செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் உருவாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகம் பெற்றிருக்கும் இப்படம் வரும் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பிரபல நடிகரும் மத்திய திரைப்படம் தணிக்கை குழுவில் ஒருவருமான எஸ் வி சேகர் அவர்கள் திரைப்படங்களுக்கு செயல்படும் தணிக்கை குழு குறித்தும் அதனால் வரும் சிக்கல்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் லியோ படத்தின் முதல் பாடலாக வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘நா ரெடி’ பாடலில் விஜய் அதிகம் சிகரெட் பிடித்து இளைஞர்களை தவறான பாதையில் வழி நடத்துகிறார் போன்ற பல சர்ச்சைகள் எழுந்தது. இந்த சர்ச்சைக்கு பின் நா ரெடி பாடலின் லிரிக் வீடியோவில் புகைபிடித்தல் எச்சரிக்கை வாசகம் படக்குழுவினரால் சேர்க்கப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து பேசுகையில்,

"விஜய் படத்துல பாட்டு பத்தி பிரச்சனை வருது.‌. அந்த படம் இன்னும் சென்சாருக்கே போகல.. சென்சார் போன பின்பு தான் தெரியும். சிகரெட் குடிக்குறத காட்டலாம். ஆனா சிகரெட் குடிச்சா இன்பமா இருக்கும். சிகரெட் குடிச்சா அதிகாரத்திற்கு வருவ.. அந்த மாதிரி சொன்னா கட் பண்ண படும்.” என்றார் அதை தொடர்ந்து சிகரெட் தொடர்பாக தணிக்கையில் சென்ற படங்களில் உதாரணமாக நடிகர் தனுஷ் நடித்து வெளியான மாரி படம் குறித்து தொடர்ந்து பேசுகையில், “மாரி னு ஒரு படம். முன்னாடி அந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துட்டாங்க.. அவர் நிறைய சிகரெட் குடிச்சிட்டே இருக்காரு னு..

நான் திரும்பவும் மறுபரிசீலனை குழு வந்தப்போ கேட்டேன். எவ்ளோ வேணா சிகரெட் குடிக்கட்டும்.. இழுக்க இழுக்க இன்பம் ன்றா மாதிரி எந்த வசனமும் கிடையாது. தனுஷ் எப்பொல்லாம் சிகரெட் பிடிக்குறானோ அப்பெல்லாம் எச்சரிக்கை வாசகம் வருது. அதுக்குமேல நமக்கு என்ன.. நம்ம கேட்க முடியாது" என்றார் எஸ்விஇ சேகர்.

மேலும் தொடர்ந்து எஸ் வி சேகர் அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் பேட்டியில் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ உள்ளே..