பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.கடந்த சில மாதங்களாக மனஅழுத்ததில் இருந்த 34 வயதான சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பண்ட்ராவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.இந்த செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் தெரியவில்லை இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இவரது மரணம் குறித்து பலரிடமும் விறுவிறுப்பாக விசாரணை நடித்து வருகின்றனர்.பாலிவுட் இண்டஸ்ட்ரியில் இருக்கும் வாரிசு அரசியல் தான் சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.பல வெளிவராத விஷயங்களை பல பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.சுஷாந்த் போன்ற ஒரு நடிகரை பாலிவுட் பிரபலங்கள் கண்டுகொள்ளாதது ஏன் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுஷாந்த் நடித்துள்ள கடைசி படமான Dil Bechara படத்தை திரையரங்கில் வெளியிடவேண்டும் என்று சுஷாந்தின் ரசிகர்கள் படக்குழுவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.அறிமுக இயக்குனர் Mukesh Chhabra இந்த படத்தை இயக்கியுள்ளார்.2012-ல் John Green எழுதிய The Fault in Our Stars என்ற புத்தகத்தை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.Sanjana Sanghi இந்த படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.Saif Ali Khan இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.தற்போது இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஜூலை 24 முதல் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் யார் வேண்டுமானாலும் இந்த படத்தை இலவசமாக பார்க்கலாம் என்றும் ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.சுஷாந்த்தின் கடைசி படமான இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கவேண்டும் என்று பல ரசிகர்களும் கோரிக்கை விடுத்தனர் , இருந்தாலும் தற்போதுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து எப்போது திரையரங்குகள் திறக்கும் என்பது தெரியாததால் படக்குழுவினர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
A story of love, hope, and endless memories.
— Disney+HotstarPremium (@DisneyplusHSP) June 25, 2020
Celebrating the late #SushantSinghRajput's legacy that will be etched in the minds of all and cherished forever. #DilBechara coming to everyone on July 24. pic.twitter.com/3gPJZvBRun