கொரோனா வைரஸ் உலகத்தையே கடந்த 2019 இறுதி முதல் பெரிதும் அச்சுறுத்தி வருகிறது.பலரும் இந்த கொடிய நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.பல உயிர்கள் இந்த நோயால் பிரிந்தன.2020-ல் உலகில் பல தொழில்களை ஸ்தம்பிக்க செய்தது இந்த கொரோனா வைரஸ்.

2020 பாதியில் இந்த நோயின் தாக்கம் சற்று குறைந்தது மக்கள் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.இந்த நேரத்தில் கொரோனாவிற்கு சில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.ஆனால் இன்னும் எந்த அளவு மருந்து நோயை குணப்படுத்துகிறது என்று தெரியவில்லை.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மீண்டும் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது.பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.பல இடங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.தமிழகத்திலும் வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு அதிகப்பணம் தேவை என்பதால் மக்கள் தங்களால் முடிந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்,இதனையடுத்து பலரும் தங்களால் முடிந்த தொகையை முதல்வரின் கொரோனா தடுப்பு நிதிக்கு அனுப்பி வந்தனர்.

தற்போது சிவகுமார்,சூர்யா,கார்த்தி ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ 1 கோடி நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர்.இக்கட்டான சூழ்நிலையில் முன்வந்து உதவிய சூர்யா குடும்பத்தினருக்கு பலரும் தங்கள் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.

At the CMO today while #ActorSivakumar@Suriya_offl⁩ ⁦@Karthi_Offl⁩ handed over the Chq for 1Cr to Hon’ble Chief Minister ⁦@mkstalin#TNCMReliefFund 🙏🏼💐 pic.twitter.com/7mNlIiIBJF

— Rajsekar Pandian (@rajsekarpandian) May 12, 2021