ஒட்டுமொத்த உலக சினிமாவையும் தமிழ் திரையுலகின் பக்கம் திருப்பியது கடந்த ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம். இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த அணிகள் குறித்து மிக அழுத்தமாக பேசியது.
மிகச் சிறந்த திரைப்படமாக அனைவரது பாராட்டுகளையும் பெற்ற ஜெய்பீம் திரைப்படம் சர்வதேச அளவில் பல விழாக்களில் திரையிடப்பட்டு, சர்வதேச விருதுகளையும் பெற்றது. முன்னதாக கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாமல் போனது.
இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்ற ஜெய் பீம் திரைப்படம் கட்டாயம் ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து இன்று (பிப்ரவரி 8ஆம் தேதி) அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் கூட ஜெய் பீம் திரைப்படம் கட்டாயம் இறுதிப் பட்டியில் இடம்பெறும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த இறுதி பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும், இறுதி வரைக்கும் சென்ற ஜெய்பீம் படக்குழுவினருக்கு கலாட்டா குழுமத்தின் பாராட்டுகள். ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் விவரங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
Going global with this year’s nominees for International Feature Film. #Oscars pic.twitter.com/WV7fAfXL3d
— The Academy (@TheAcademy) February 8, 2022
And the nominees for Best Picture are... #Oscars pic.twitter.com/wKEWVMpqwl
— The Academy (@TheAcademy) February 8, 2022