சிறு வயது முதலே நடிப்பு, நடனம், பாடல், இசை, இயக்கம் என சினிமாவில் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் STR. சகலகலா வல்லவனாக திகழும் STR-க்கு சமையலும் கை வந்த கலை என்பது இந்த லாக்டவுனில் தெரியவந்தது. தாய் தந்தைக்கு வீட்டில் தினமும் வித விதமான உணவுகளை சமைத்து போட்டு அசத்தி வருகிறார். கிச்சனில் நடிகர் VTV கணேஷுடன் சேர்ந்து சமையல் செய்த வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டது. லாக்டவுனில் வீட்டிலேயே உடற்பயிற்சி மற்றும் புதிய ஸ்கிரிப்ட்டுகள் கேட்பது என பயனுள்ள செயல்களை செய்து வருகிறார்.
.எப்போதும் புது ட்ரெண்டை உருவாக்கும் STR, லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் நடித்து இணையதள ரசிகர்களுக்கு விருந்தளித்தார். ஊரடங்கில் நடித்த உச்ச நடிகர் STR மட்டுமே என்ற புகழையும் பெற்றார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் இந்த நிலை மாறி இயல்பு நிலை திரும்பியவுடன் முதலில் STR கலந்துகொள்ளவிருக்கும் படப்பிடிப்பு மாநாடு.
தற்போது இப்படத்தின் ஃபேன் மேட் மோஷன் போஸ்டரை உருவாக்கியுள்ளனர் STR ரசிகர்கள். அதை பாராட்டி மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், STR மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அற்புதமான பணி என்று பாராட்டியுள்ளார்.
.வெங்கட் பிரபு மற்றும் STR இணைந்து பணியாற்றும் இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர். நாளுக்கு நாள் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து செல்கிறது என்பதற்கு இதுவே சரியான உதாரணம்.
.I can understand ur love towards our #STR . Really an amazing work... appreciable 👏👏👏 https://t.co/64sr0l2aGp
— sureshkamatchi (@sureshkamatchi) June 27, 2020