இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசை ஜாம்பவானாக தமிழரின் பெருமையை உலக அரங்கில் தூக்கி நிறுத்திய பெருமைமிகு தமிழனாகவும் தொடர்ந்து தனது இசை மழையால் ரசிகர்களை நனைத்து வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தனது இசையால் மக்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பார்த்திபன் அவர்களின் சாதனை படைப்பாக வெளிவந்த இரவின் நிழல், சீயான் விக்ரம் மிரட்டலான பல கெட்டப்பில் நடித்து அசத்திய கோப்ரா, இயக்குனர் கௌதம் மேனன் - சிலம்பரசன்.TR வெற்றி கூட்டணியின் வெந்து தணிந்தது காடு, இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் பாகம் 1 ஆகிய திரைப்படங்களில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தன.
தமிழில் மட்டுமல்லாது மலையாளத்தில் ஃபகத் பாஸில் நடிப்பில் வெளிவந்த மலையன்குஞ்சு, பாலிவுட்டில் ஹீரோபண்டி 2 மற்றும் மில்லி ஆகிய திரைப்படங்களுக்கும் இசைப்புயலின் இசை தான். அதேபோல் தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் சிலம்பரசன்.TR - கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல, இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மிப்பான பொன்னியின் செல்வன் பாகம் 2, சிவகார்த்திகேயனின் ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் படமான அயலான், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள மாமன்னன், மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்கும் லால் சலாம் ஆகிய திரைப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார்.
முன்னதாக தமிழ் சினிமாவின் முதல் மோஷன் கேப்சர் அனிமேஷன் திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மூன்று அட்டகாசமான வேடங்களில் நடிக்க அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கோச்சடையான். முன்னணி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் கதை, திரைக்கதை வசனத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், ஷோபனா, ஜாக்கி ஷெராஃப், நாசர், ஆதி உள்ளிட்ட பலர் கோச்சடையான் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தனர். மேலும் மறைந்த பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களை அனிமேஷன் வடிவில் கோச்சடையான் திரைப்படத்தில் மீண்டும் கொண்டு வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர் படக் குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்த்த அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற தவறிய போதும் கதையும் திரைக்கதையும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதிலும் குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த கோச்சடையான் திரைப்படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத பாடல்களாக அமைந்தன. படம் வெளியான சமயத்தில் இந்த பாடல்கள் மிகப்பெரிய கவனத்தை பெற தவறினாலும் வழக்கமான ஏ.ஆர்.ரஹ்மானின் சில பாடல்களைப் போலவே ஸ்லோ பாய்சனாக இப்பாடல்கள் ரசிகர்களின் இதயத்தை விட்டு நீங்கா இடம் பிடித்தன. அதிலும் குறிப்பாக கோச்சடையான் திரைப்படத்தில் பின்னணி இசையை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். அந்த வகையில் கோச்சடையான் திரைப்படத்தில் பின்னணி இசை ட்ராக்குகள் கொண்ட OSTகாக ரசிகர்கள் நீண்ட காலமாக ஆவலோடு காத்திருந்தனர். கிட்டத்தட்ட படம் ரிலீஸ் ஆகி 8 ஆண்டுகள் கடந்தும் கோச்சடையான் திரைப்படத்தின் பின்னணி இசைக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக தற்போது கோச்சடையான் திரைப்படத்தின் OST ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி கோச்சடையான் திரைப்படத்தின் OST ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…