உலகப் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை சன்னி லியோன் தொடர்ந்து இந்திய திரையுலகில் நடிகையாக பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். தமிழிலும் நடிகர் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், அடுத்ததாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் தயாராகி வரும் கொட்டேஷன் கேங் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து வீரமாதேவி & ஷெரோ என வரிசையாக தமிழிலும் பல படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் நடிப்பில், ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட்(OMG). இயக்குனர் R.யுவன் எழுதி இயக்கியுள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா மற்றும் சதீஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் யோகிபாபு & ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். VAU மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் ஓ மை கோஸ்ட் திரைப்படத்திற்கு தீபக்.D.மேனன் ஒளிப்பதிவில், அருள்.E.சித்தார்த் படத்தொகுப்பு செய்ய, ஜாவித் ரியாஸ் பாடல்களுக்கு இசையமைக்க, தரண் குமார் பின்னணி இசை சேர்த்துள்ளார்.

வருகிற டிசம்பர் 30ஆம் தேதி ஓ மை கோஸ்ட் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனுடைய நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த பற்றிய நடிகை சன்னி லியோன் தனது திரைப்பயண அனுபவங்கள் மற்றும் ஓ மை கோஸ்ட் திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பிக் பாஸ்க்கு பிறகு ஹாலிவுட்டில் களமிறங்கும் எண்ணம் இருந்ததா..? அது குறித்து உங்களுடைய கருத்து என்ன..? எனக் கேட்டபோது,

“ஹாலிவுட்டில் சாதிக்க வேண்டும் என்பது உலகம் முழுக்க இருக்கும் பலருக்கும், பல சரக்கு கடையில் வேலை பார்ப்பவர், உணவு பரிமாறுபவர், செவிலியர், மருத்துவர் என அனைவருக்கும் எப்படியாவது ஹாலிவுட் உலகத்திற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்காக மிகப்பெரிய அர்ப்பணிப்பு வேண்டும். அதற்கென தனி லெவலில் டெடிகேஷன் இருந்தால் தான் முடியும்” என பதிலளித்துள்ளார். சன்னி லியோனின் அந்த முழு பேட்டி இதோ…