தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் நடிகர் சதீஷ், நாய் சேகர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் களமிறங்கினார் தொடர்ந்து சட்டம் என் கையில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் உலக அளவில் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையான நடிகை சன்னி லியோனுடன் இணைந்து சதீஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட்.
கலகலப்பான காமெடி ஃபேன்டஸி அட்வென்ச்சர் த்ரில்லர் திரைப்படமாக இயக்குனர் R.யுவன் எழுதி இயக்கியுள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் சன்னி லியோன் மற்றும் சதீஷ் உடன் இணைந்து யோகிபாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
VAU மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் D.வீரசக்தி மற்றும் வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் K.சசிகுமார் இணைந்து தயாரித்துள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்திற்கு தீபக்.D.மேனன் ஒளிப்பதிவில் அருள்.E.சித்தார்த் படத்தொகுப்பு செய்ய ஜாவத் ரியாஸ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தரண் குமார் பின்னணி இசை சேர்த்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என PAN INDIA திரைப்படமாக ஓ மை கோஸ்ட் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. கலக்கலான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.