தெலுங்கு திரை உலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சந்தீப் கிஷன் தமிழில் யாருடா மகேஷ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து தமிழில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நெஞ்சில் துணிவிருந்தால், தயாரிப்பாளரும் இயக்குனருமான CV.குமார் இயக்கத்தில் மாயவன், இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சந்தீப் கிஷன் அடுத்ததாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதனிடையே புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் மைக்கேல். விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கௌஷிக் மற்றும் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மைக்கேல் படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கரண் C ப்ரொடக்சன் இணைந்து தயாரிக்க அதிரடி ஆக்ஷன் ப்ளாக் திரைப்படமாக தயாராகியுள்ள மைக்கேல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் மைக்கேல் திரைப்படத்தின் அதிரடியான டீசர் தற்போது வெளியானது. சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மைக்கேல் திரைப்படத்தின் டீசர் இதோ…