அட்டகாசமான பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அரண்மனை திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த வரிசையில் அடுத்ததாக சுந்தர்.C இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் காஃபி வித் காதல்.
முன்னதாக சுந்தர்.C இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்.C - ஜீவா - ஜெய் கூட்டணி இணைந்துள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தில் ஜீவா , ஜெய் உடன் இணைந்து DD-திவ்யதர்ஷினி, ஸ்ரீகாந்த், அமிர்தா, மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், சம்யுக்தா சண்முகநாதன், ஐஸ்வர்யா தத்தா, ரெட்டின் கிங்ஸ்லி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள காஃபி வித் காதல் திரைப்படத்திற்கு E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, ஃபெண்ணி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார். ரொமான்டிக் காமெடி என்ட்டர்டெய்னிங் திரைப்படமாக தயாராகியிருக்கும் காஃபி வித் காதல் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் காஃபி வித் காதல் திரைப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஃபி வித் காதல் திரைப்படத்திலிருந்து மாற்றம் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த லிரிக் விடியோ இதோ…